Tamilstar
News Tamil News

தற்போது தான் தெரிகிறது சிவகார்த்திகேயன் ஏன் அழுதார் என்று, பெருகும் ரசிகர்கள் ஆதரவு

சுஷாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடித்த தோனி கதாபத்திரம் யாராலும் மறக்க முடியாது.

அந்த அளவிற்கு தோனியாகவே வாழ்ந்து இருப்பார், இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த நிகழ்வு ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது. இதற்கு பிரதமர் வரை இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுஷாந்த் தொலைக்காட்சியில் இருந்து படத்திற்கு வந்தவர், அதனால் தான் அவரை பலரும் நசுக்கினர்.

மேலும் ரசிகர்கள் டுவிட்டரில் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை ஷேர் செய்து, நம் இண்டஸ்ட்ரி நடிகர்கள் பாலிவுட் போல் இல்லை என்று புகழ்ந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் கஷ்டப்பட்டு வந்தும் அவருக்கு ஒரு சிலர் கொடுத்த கஷ்டத்தால் தான் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.