டான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
வரும் அக்டோபர் 21ஆம் தேதி அனைத்து திரையரங்குகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் பிரஸ்மீட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் உரையாடிய நெகிழ்ச்சியான பேச்சு வைரல் ஆகி வருகிறது.
அதில் அவர், “பிரின்ஸ் திரைப்படம் எனது முதல் தீபாவளி ரிலீஸ், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அனைத்து ஹீரோக்களின் படங்களையும் தீபாவளி ரிலீஸ் ஆக பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது தீபாவளி அன்று தியேட்டருக்கு போனால், என்னுடைய படம் இருக்கும் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது!” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
![sivakarthikeyan-emotional-speech-viral update](https://b3585245.smushcdn.com/3585245/wp-content/uploads/2022/10/sivakarthikeyan-emotional-speech-viral-update-e1666146038844.webp?lossy=2&strip=1&webp=1)