கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘எஸ்கே21’ திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சாய்பல்லவியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருந்த “அயலான்” திரைப்படத்தின் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
ஏலியனை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஏற்கனவே ஆர்வத்துடன் இருந்து வரும் நிலையில் இப்படம் குறித்து சுவாரசியமான தகவலை இப்படத்தின் டெக்னீசியன் குழு பகிர்ந்துள்ளது. அதில் அவர்கள், இந்திய சினிமாவில் இதுவரை செய்யாத பல விஷயங்களை அயலான் படத்தில் செய்திருப்பதாக படத்தின் டெக்னீசியன் குழுவான phantom fx குழு கூறியுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் டெக்னிக்கலாகவே ஏலியன்களுக்கு உயிர் கொடுத்ததுடன், ஏலியன் உலகத்தை CG மூலம் அற்புதமாக கொண்டு வந்திருக்கிறோம். இது நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவமாக இருக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது . இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகிறது.