கோலிவுட் திரை உலகில் பிரபல உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருக்கும் நிலையில் சிவா நடிப்பில் ஏற்கனவே உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் சயின்ஸ் பிக்சன் கதை அம்சத்துடன் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இப்படத்தின் ரிலீஸ் இதுவரை தாமதமாகி கொண்டிருந்த நிலையில் தற்போது இப்படம் வருகிற தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.