தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், டான் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்திகேயன் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதன் படி டான் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
See you in theatres 😊👍 #DONfromMarch25 #DON pic.twitter.com/qhjrtJkRe3
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 31, 2022