தென்னிந்திய திரை உலகில் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்த வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜெய்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க உள்ளார் என்ற தகவலை படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் சிவராஜ் குமாரை நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பேசியுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறாரோ என்று இணையதளங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.
Recent pic of our #Prince @Siva_Kartikeyan Anna with @NimmaShivanna sir 🤩💥 pic.twitter.com/pfn89e2YDV
— All India SKFC (@AllIndiaSKFC) November 18, 2022