தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.
இதில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு எண்ணூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனமும், ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனமும் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
#Maaveeran Pre-Business🔥🔥🔥
Satellite Rights : Sun TV
OTT Rights : Amazon Prime
Music Label : Saregama MusicRecord Price For #SK & Estimated Nearly 60+ Crores in Pre-Business👊🏾#Sivakarthikeyan | #Mysskin pic.twitter.com/qjPVBoL0wS
— Saloon Kada Shanmugam (@saloon_kada) December 6, 2022