Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாவீரன் படத்தின் கதை இதுதான்.?? வெளியான ஸ்டோரி லைன்.!!

sivakarthikeyan-maaveeran-movie-story-line

தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.

இதில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு எண்ணூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதை பற்றின தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பிரபல ஊடக நிறுவனத்தில் கார்ட்டூனிஸ்டாக இணைகிறார், அதில் அவர் ஒரு பத்திரிகையாளராக நடிக்கும் அதிதி சங்கரை சந்திக்கிறார். சிவகார்த்திகேயன் அவரது வேலையில் எதை வரைந்தாலும் அது நிஜ வாழ்க்கையில் நடக்கும் என்பதே இப்படத்தின் கதைகளாகும். இந்த வித்தியாசமான ஜொனரில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம் பற்றின தகவல் இணையதளத்தில் ரசிகர்களால் தற்போது வைரலாகி வருகிறது.

sivakarthikeyan-maaveeran-movie-story-line

sivakarthikeyan-maaveeran-movie-story-line