தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கியவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளுவது கவுண்டமணியின் பாணி. அவரது காமெடிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வாய்மை. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு பின்னர் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை அவரது இல்லத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், “இது மகிழ்ச்சியான, சிறப்பான தருணம், இந்த நாள் என்றென்றும் நினைவில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
With the legend #GoundamaniSir
A great moment with lots of fun and a day to be remembered 🙏❤️ pic.twitter.com/CqpVrEiew3— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 23, 2021