தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூ ஜமால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Murugadoss Movie Villian update