தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தான் இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் வெளிவந்திருந்தது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹீரோ படம், ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிளாக் பஸ்டர் இயக்குனரான பாண்டிராஜின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க போகிறோம்.
ஆனால் தற்போது நடித்து கொண்டிருக்கும் அணைத்து படங்களின் வேலைகளையும் முதிவிட்டு, அதன்பின் தான் பாண்டிராஜுடன் நடிகர் சிவகார்த்திகேயன் கைகோர்க்க போவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை, ஆனால் இது குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என கூறப்படுகிறது.