தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேல் பாலாஜி. இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
இவருடைய மறைவு அவரது குடும்பத்திற்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வடிவேல் பாலாஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தார், வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய குடும்பத்தில் உள்ள 150 பேரும் வடிவேல் பாலாஜி மறைவிற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த வடிவேல் பாலாஜி பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த அறிவிப்பு ரசிகர்களை பாராட்ட வைத்துள்ளது.
நடிகர் வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.