தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வரும் இவர் ஆரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஆராதனா என மூத்த மகள் இருக்க கடந்த வருடம் குகன் என இரண்டாவது மகனை பெற்றெடுத்தனர். இதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மூன்றாவது குழந்தைக்கு அப்பாவானார்.
இந்த நிலையில் தற்போது தனது மூன்றாவது மகனுக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Aaradhana – Gugan – PAVAN ❤️❤️❤️ pic.twitter.com/T0YNorVIQb
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 15, 2024