தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடிக்கும் படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
டான் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பை கோயம்புத்தூரில் நடத்தி முடித்த படக்குழு, 2-ம் கட்ட படப்பிடிப்பை தொடங்க இருந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்ததால் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற 17-ந் தேதி சென்னையில் மீண்டும் தொடங்க உள்ளது.