Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது”:எஸ் ஜே சூர்யா பேச்சு

sj-surya-speech-viral update

“‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு நேரிலும் சமூக வலைதளத்திலும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.இந்நிலையில், ‘ஜிகர்தண்டா 2’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா, \”வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம்.

ரசிப்புத் தன்மை தற்போது முன்பை விட மிகவும் அதிகமாகி உள்ளது. ஒரு நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம், ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வரும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. \”நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்\” என்று கார்த்திக் சுப்பராஜ் சொல்வார். அதே மாதிரி இந்த படம் பேசுகிறது. லாரன்ஸ் அவர்கள் எனது மிகப்பெரிய நண்பர், நல்ல மனிதர், நல்ல பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது. அனைவருக்கும் பிடித்த மாதிரி அமைந்திருக்கிறது. நல்ல கதையை இயக்குனர் திரையில் காட்டியிருக்கிறார்\” என்று பேசினார். “,

sj-surya-speech-viral update
sj-surya-speech-viral update