தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. இப்படி இருக்கையில் இவர் தற்போது படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.தொடர்ந்து நல்ல நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். விஜய், சிம்பு, என பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ள எஸ் ஜே சூர்யா மார்க் ஆண்டனி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் அந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இந்த படத்திற்காக மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அடுத்த அடுத்த படங்களில் எஸ்ஜே சூர்யாவின் சம்பளம் உயர அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.