Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எஸ்.கே 21 படம் குறித்து வெளியான தரமான தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இறுதியாக வெளியான மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே 21 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார் என்று மட்டுமே அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படம் பற்றி வேறொரு தகவல் வெளியாகாமல் இருந்தது.

இப்படி அந்த நிலவில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் விருந்தாக பிப்ரவரி 16வது அல்லது 17வது தேதியில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன், முருகதாஸ் கூட்டணியில் உருவாக உள்ள படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SK 21 movie latest update viral
SK 21 movie latest update viral