Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெற்றிகரமாக முடிந்த எஸ்.கே 23 படத்தின் பூஜை. படக்குழு வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் எஸ்.கே.23. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் பேனரில் திருப்பதி பிரசாத் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்துக்கான பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகளை ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தொடங்கினார். இந்த படப்பிடிப்பில் சிவகாத்திகேயன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பல்வேறு சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ‘SK23’ படத்தில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்க உள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014-ல் வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் ஏஆர் முருகதாஸ் கதை எழுத அவரது உதவி இயக்குனர் திருக்குமரன் இயக்கினார்.

SK 23 movie Pooja update viral
SK 23 movie Pooja update viral