தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான அயலான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவி உடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் எஸ் கே 21 திரைப்படம் வெளியாக உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் ஆகியவை சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சிறப்பு வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல் மற்றும் சம்மதம் தெரிவித்தால் SK 21 தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.