Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

SK21 படத்தில் நடிக்க போகும் வில்லன் யார் தெரியுமா.?? வைரலாகும் தகவல்

sk21 movie latest update viral

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் SK21 என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து வரும் இப்படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வரும். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல் வைரலாகி வருகிறது.

அதன்படி, ராணுவ கதைகளும் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது காஷ்மீரில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ராகுல் போஸ் இப்படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

sk21 movie latest update viral
sk21 movie latest update viral