தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது இப்படம் தொடர்பான புதிய அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி, Sk21 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மிலிட்டரி ஆபீஸராக நடிக்க இருக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பு பயிற்சி மும்பையில் அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு அடுத்த மாதத்தில் காஷ்மீரில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
#SK21 – An Army Based Intense Action Drama Set in the 60s..⭐
• #Sivakarthikeyan's currently under Training for the Role in Mumbai.. 🤝 Shoot begins from next month in Kashmir..⭐
• Music by Gvprakash..🤙
— Laxmi Kanth (@iammoviebuff007) April 11, 2023