Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் செல்லும் சிவகார்த்திகேயன்

sk21 movie shooting viral update

சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் செல்ல இருப்பதாக விமான நிலையத்தில் படக்குழு இருக்கும் புகைப்படங்களுடன் ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர். சமீபத்தில் தளபதி விஜயின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.