தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது. இதுவரை இரண்டு வாரங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளன.மொத்தம் 10 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பழைய கோமாளிகள் சிலரோடு சேர்ந்து புதிய கோமாளிகள் இணைந்து 10 கோமாளிகள் பங்கேற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர் தான் மணிமேகலை.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என சொல்லலாம். இவர் சமைக்கும் போது அடிக்கடி தீக்காயங்களுக்கு ஆளாவது வழக்கமான ஒன்று தான். வீட்டில் சாப்பாடு சமைக்க போய் குக்கர் வெடித்து வீடெல்லாம் சிதறிய கதையெல்லாம் நாம் ஏற்கனவே கேட்டுள்ளோம்.
இந்த நிலையில் இவருக்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கையில் சிறிய தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இந்த வார நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. இதுவரை வெளியான ப்ரோமோ வீடியோவிலும் மணிமேகலையை காணவில்லை.
இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் அவர் பங்கேற்பது சந்தேகம் தான் என சொல்லப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
