Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் சோனாக்சி சின்ஹா

Sonakshi Sinha signs Telugu film

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜினியுடன் இணைந்து லிங்கா படத்தில் நடித்திருந்தார். தற்போது நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

தெலுங்கில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி ஹிட்டான படம் ‘சோக்காடே சின்னி நாயனா’. இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்க இருக்கிறார்.