Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“கண்டிப்பாக புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பேன்”: சோனியா அகர்வால்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புதுப்பேட்டை’. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து சமீபத்தில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், “புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார். இதற்கு கொக்கி குமார் மீண்டும் வரார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் ‘புதுப்பேட்டை 2’ திரைப்படத்தில் நடிக்க நடிகை சோனியா அகர்வால் விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சோனியா அகர்வால், “கண்டிப்பாக புதுப்பேட்டை-2 படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பேன். நடிப்பு என்னுடைய தொழில். செல்வாக்கூட சேர்ந்து வேலை செய்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், இதுவரை ‘புதுப்பேட்டை 2’ படத்தில் நடிக்கவேண்டும் என்று எந்த அழைப்பும் வரவில்லை. யார் யார் இதுல நடிக்க போகிறார்கள் என்றும் எனக்கு தெரியாது” என்றார்.

Soniya Agarwal about pudhupettai 2 movie
Soniya Agarwal about pudhupettai 2 movie