Tamilstar
News Tamil News

மூன்று குழந்தைகளை தத்தெடுத்த பாலிவுட் நடிகர்?

பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வரும் சோனு சூட் ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த அருந்ததி படத்தின் மூலம், இவருடைய பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வில்லன் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு அட்டகாசமாக இருக்கும்.

பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்த இவர், நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவாகவே வலம் வருகிறார். இந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு இவர் செய்த உதவிகள் ஒன்றல்ல.

கடந்த சில நாட்களாகவே இவர் பெரிதும் பேசப்படுவதற்கு காரணம் என்னவென்றால், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் விவசாயி தன் மகள்களை வைத்து ஏர் பூட்டியதை அவர்களுக்கு ஒரு டிராக்டர் வாங்கி நன்கொடை அளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தேவையான ஏராளமான பஸ்களை தன் சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்து தந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வேலை இழந்து காய்கறி விற்ற ஐடியில் பணியாற்றி பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதையெல்லாம் தாண்டி தற்போது மூன்று ஏழை குழந்தைகளை தத்தெடுத்து உள்ள மகத்தான செயல்களையும் செய்துள்ளார்.