Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடிக்கு சொத்துகளை அடமானம் வைத்த சோனு சூட்

Sonu Sood mortgages assets worth Rs 10 crore to help the poor

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.

குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

இத்தகைய மனிதநேயமிக்க உதவிகளை செய்துவந்த அவருக்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. சோனு சூட் தனது பெயரிலும், தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகள் என மொத்தம் எட்டு சொத்துக்களை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏழை மக்களுக்கு உதவ தான் சம்பாதித்து வாங்கிய சொத்துகளையே அடமானம் வைத்த சோனு சூட்டின் செயல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.