கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து ‘சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்’ படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் ‘மிர்ச்சி’ சிவா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் ராதா ரவி இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இந்த வருஷம் எலெக்ஷன் இருக்குப்பா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Team #SoodhuKavvum2: Naadum Naatu Makkalum Glad to Welcome Actor #RadhaRavi Sir onboard 💥
A @dir_arjun Directorial
Produced By @icvkumar @thangamcinemas #இந்த_வருஷம்_எலெக்ஷன்_இருக்குப்பா pic.twitter.com/4ePOiLHzak— Thirukumaran Entertainment (@ThirukumaranEnt) January 3, 2024