ரஷ்யாவில் கொரோனா அச்சுறுத்தலால் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழர்களை நாடு திரும்ப உதவி செய்தவர், பிரபல நடிகர் சோனு சூட். கரோனா வைரஸ் தாக்கத்தால் அதன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இந்திய மக்களுக்கு ஓடோடி சென்று உதவி வருபவர் பிரபல நடிகர் சோனு சூட்.
இவர் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏராளமான பஸ்,லாரிகள் என தனது சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார்.
அதன்பின் தானே களமிறங்கி ஏழை மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்படி ஒரு சமூக தொண்டாற்றும் குழுவையே உருவாக்கிக்கொண்டு அதன்மூலம் ஏழை மக்களுக்கு உடனடியாக உதவிகள் சென்றடையும் படி ஹெல்ப்லைன் எண்களையும் உருவாக்கியுள்ளார்.
ஏழை விவசாயிக்கு டிராக்டர், ஐடி பெண்ணுக்கு வேலை வாங்கித் தந்தது, காய்கறி விற்ற சினிமா பிரபலங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தது போன்ற பல்வேறு உதவிகளை இந்த கொரோனா காலத்தில் செய்து வருகிறார்.
அதேபோன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 90 மாணவர்களையும் இந்தியா வரவழைத்தார்.
அதில் 200 பேர் செல்லக்கூடிய விமானத்தில் 91 தமிழக மாணவர்களுக்கான டிக்கெட்டையும் மீதமுள்ள 109 காலி டிக்கெட்டுகளையும் சோனு சூட் சொந்த காசில் வாங்கியுள்ளார். இவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர்.