தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படத்திற்கு அடுத்ததாக இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இந்த சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடியாக அபர்னதி பாலமுரளி நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து மண்ணுருண்ட, காட்டு பயலே, வெய்யோன் சில்லி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனையடுத்து தற்போது இப்படத்தின் செம மாஸான பிஜிஎம் வீடியோ ஒன்றை ஜிவி பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ
Hold on to ur seat belts … a glimpse from the bgscore of opening reel for u … 🔥🔥 #sooraraipottru @Suriya_offl #sudhakongara @rajsekarpandian @SonyMusicSouth pic.twitter.com/n9jlN44pyl
— G.V.Prakash Kumar (@gvprakash) October 17, 2020
இந்தத் திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.