தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சூரரைப் போற்று. நடிகர் சூர்யாவே தயாரித்துள்ள இந்தப் படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க அபர்ணதி பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பல நடிகர், நடிகைகள் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
சூர்யாவின் திரைப்பயணத்தில் இப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் அக்டோபர் 30ம் தேதி உலகம் முழுவதும் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகவுள்ளது.
ரிலீஸுக்கு முன்னரே இப்படம் அனைத்து வியாபாரங்களும் சேர்த்து 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது குறித்த விவரம் இதோ
1. அமேசான் பிரைம் ரைட்ஸ் – 45+ கோடி
2. சாட்டிலைட் ரைட்ஸ் [ தமிழ், தெலுங்கு ] – 20 கோடி
3. ஹிந்தி டப் மற்றும் ரீமேக் ரைட்ஸ் – 20+ கோடி
4. ஓவர்சீஸ் – 10+ கோடி