Tamilstar
News Tamil News

சூரரைப் போற்று சென்சார் முடிந்தது, சென்சார் சான்றிதழ் இதோ!

சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தின் டீசர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து பாடல்கள் பட்சித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, இந்நிலையில் தற்போது கொரொனாவால் சினிமா உலகமே முடங்கியுள்ளது.

இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் சூரரைப் போற்று சென்சார் முடிந்துள்ளது, இவை எப்போது முடிந்தது என்று தெரியவில்லை.

ஆனால், தற்போது தான் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிட்டுள்ளனர். எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் இந்த படத்திற்கு யு (U) சான்றிதழ் கிடைத்துள்ளது.