சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளதால், இந்திய விமானப்படை தரப்பிலிருந்து ஒப்புதல் கடிதம் வருவதற்காக படக்குழு காத்திருக்கிறதாம்.
அதனால் தான் தற்போது வரை படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லையாம். இந்த சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்பட்டால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
From us to you, an ode to never-ending support and friendship https://t.co/5KuqtOfX7J#SooraraiPottruOnPrime@primevideoin #SudhaKongara @gvprakash @2D_ENTPVTLTD@rajsekarpandian pic.twitter.com/c447emLnyf
— Suriya Sivakumar (@Suriya_offl) October 22, 2020