தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று.
இயக்குனர் சுதா கே. பிரசாத் அவர்கள் இயக்க சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் வரும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி OTT அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சூர்யா.
இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் முக்கியமாக திரையுலக விநியோகஸ்தர்கள் நேர்காணலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளிவரும் என தற்போது முடிவாகி, மேலும் இப்படத்தை சன் தொலைகாட்சி 15 கோடிக்கு சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது.
இதனால் வரும் 2021 பொங்கல் அன்று இப்படத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய முடிவு எடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.