ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி, சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் சூரி, ரஜினியுடன் நடிப்பது இதுவே முதன்முறை, அது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “தலைவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு, வேற லெவல் எனர்ஜி. அவருடன் நடிப்பது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.