கொரோனாவுக்கெதிராக போராடும் முன்கள வீரர்களான தூய்மை பணியாளர்களுக்கு தனது பிநந்தநாளில் நிவாரணம் வழங்கும் தனது நண்பரை காணொளி மூலம் பார்த்து மகிழ்ச்சியில் கண்கலங்கினார் திரைப்பட நடிகர் சூரி.
தமிழ்ப்பட திரையுலகில் கொடி கட்டி பறக்கும் காமெடி திரைப்பட நடிகரான சூரியின் பிறந்தநாள் சாமிதோப்பில் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதி வளாகத்திலுள்ள மண்டபத்தில் கொரோனாவுக்கெதிராக போராடும் முன்கள வீரர்களான தென்தாமரைகுளம் பேரூராட்சி, சுவாமிதோப்பு ஊராட்சி மற்றும் கரும்பாட்டூர் ஊராட்சிகளைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகளை சூரியின் நண்பரும், பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளருமான சதீஸ்ராஜா வழங்கினார்.
நிகழச்சியில் ஸ்ரீ குருசிவசந்திரன்ஜி, சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன், பாஜக அகஸ்தீஸ்லரம் மண்டல தலைவர் சௌந்தர்ராஜன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை திரைப்பட நடிகர் சூரி காணொளி காட்சி மூலம் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென மகிழ்ச்சியில் கண்கலங்கினார். இச்சம்பவம் அங்கே கூடியிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.