மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் வீட்டிலிருக்கும் சூரி, விழிப்புணர்வு வீடியோக்களையும், தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.
தற்போது தான் வளர்க்கும் காளையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் சூரி, “ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா” என்று ட்வீட் செய்திருக்கிறார். ஜல்லிக்கட்டு காளையுடன் சூரி இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
ஊரடங்குக்கு நடுவுல
ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா!!🙏 pic.twitter.com/74NcejEVdB— Actor Soori (@sooriofficial) July 6, 2020