பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.
அதிலும் சென்ற வருடம் வெளிவந்த அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வாழ்வில் மாபெரும் வசூல் சாதனை செய்த ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து எஸ். தானு தயாரிப்பில் சூர்யாவுடன் வாடிவாசல் மற்றும் சூரியுடன் ஒரு படம் என கமிட்டாகி வுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
மேலும் மீண்டும் 5ஆம் முறையாக நடிகர் தனுஷுடன் கைகோர்க்க போகிறார் வெற்றிமாறன் என்றும் சில தகவல்கள் கோலிவுட் வட்டாரங்கலில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்காக சூரி தாடி, மீசை என செம்ம மாஸ் கெட்டப் ஒன்றில் இருந்து வருகிறார் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் இப்படத்திற்காக ஜிமில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் நடிகர் சூரி. இதோ அந்த வீடியோ..