தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் ரசிகர்கள் மத்தியில் அன்போடு பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “தளபதி 67” திரைப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தா லோகேஷ் கனகராஜின் பதிவிற்கு “தியேட்டர்களை திருவிழாக்களமாக்கி தெறிக்க விட வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு ரீட்வீட் செய்திருக்கிறார். அந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தியேட்டர்களை திருவிழாக் களமாக்கி தெறிக்கவிட வாழ்த்துகள்🥰@actorvijay அண்ணே@Dir_Lokesh ப்ரதர்@anirudhofficial ப்ரதர்@7screenstudio & team https://t.co/VE82MgucUG
— Actor Soori (@sooriofficial) January 30, 2023