Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

சொர்க்கவாசல் திரைவிமர்சனம்

sorgavaasal movie review

ஆர்.ஜே பாலாஜி தெருவோர வண்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் சமைக்கும் உணவிற்கு என தனி ரசிகர்கள் உள்ளன. இந்த தெருக்கடையை அடுத்தக்கட்டத்திற்கு ஒரு ஓட்டலாக மாற்ற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார் பாலாஜி. இவர் கடைக்கு எதிரில் பூக்கடை வைத்துள்ளார் கதாநாயகியான சானியா ஐயப்பன் இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. பாலாஜியின் கடைக்கு ரெகுலராக வங்கியின் மேனேஜர் ஒருவர் சாப்பிட வருகிறார். அவரிடம் வங்கி கடன் வாங்குவதற்காக அப்லை செய்கிறார் பாலாஜி. சில டாக்குமெண்ட்சில் கையெழுத்து வாங்குவதற்காக வங்கியின் மேனேஜர் அவரது வீட்டிற்கு வர சொல்லி பாலாஜியின் கடையில் கூறிவிட்டு செல்கிறார். கையெழுத்து இடுவதற்காக பாலாஜி மேனேஜரின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் எதிர்பாராத விதமாக வங்கி மேனேஜர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். மேனேஜரின் கொலையில் பாலாஜி-க்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதனால் பாலாஜியை சிறையில் அடைக்கின்றனர்.

சிறையில் எதிர்ப்பாராத பிரச்சனைகளை பாலாஜி எதிர்க்கொள்கிறார். ஆர்ஜே பாலாஜி அந்த சிறையில் இருந்து வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். கடைசியில் என்ன ஆனது? ஆர். பாலாஜி சிறையில் இருந்து வெளிவந்தாரா? அவர் ஒரு நிரபராதி என நிருபித்தாரா? அவர் எதிர்க்கொண்ட பிரச்சனைகள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. நடிகர்கள் மாறுப்பட்ட தோற்றம் மற்றும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து இம்மாதிரியான எமோஷனல் மற்றும் சீரியஸ் கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்ததற்கு பாராட்டுகள். சில எமோஷனல் காட்சிகள் நடிக்கும் போது ஓவர் ஆக்டிங் செய்வதாக பார்வையாளர்களுக்கு தோன்றுகிறது. கதாநாயகியாக நடித்துள்ள சானியா ஐயப்பன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

செல்வராகவன், கருணாஸ், நட்டி , பாலாஜி சக்திவேல் அவர்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்கம் 1990 களில் மத்திய சிறைச்சாலையை மையப்பகுதியாக கொண்டு கேங்ஸ்டர் படமாக இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனரான சித்தார்த் விஷ்வநாத். பல்வேறு உண்மை சம்பவங்களை மையமாக ராவான ஒரு படமாக இயக்கியுள்ளார். ஒரு சம்பவத்தைச் சுற்றி பின்னப்பட்ட கதைகளை, அதில் தொடர்புடையவர்களின் வாக்குமூலங்களுடனும், நேரடி சாட்சியங்களுடனும், சஸ்பென்ஸை ஒளித்து வைத்தது நான்-லீனியர் முறையில் கொண்டு சென்ற விதம் சுவாரஸ்யம். அதிலும் பரபரவென கடக்கும் இரண்டாம் பாதி பலம். படத்தில் இடம் பெற்ற வசனங்கள் சிறப்பு. படத்தின் முதல் பாதியில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். இசை கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். ஆக்‌ஷன் காட்சிகளை கூடுதல் விறுவிறுப்பாக பயணிக்க உதவியுள்ளது. ஒளிப்பதிவு பிரின்ஸ் ஆன்டர்சனின் ஒளிப்பதிவு சிறைச்சாலையில் உள்ள அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது. தயாரிப்பு ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

sorgavaasal movie review