பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறார்.
3 நாட்கள் முன்பு, பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை தேறி வருவதாக வெளிவந்த தகவலால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் நேற்று திடீரென அவர் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்த செய்தியால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
எனினும் இன்று காலை அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியால் மருத்துவமனையை கடந்த சிலநாட்களாக சோகத்துடன் சுற்றியுள்ள ஏராளமான ரசிகர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்துவருகின்றார்கள்.