தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.
வாய்ப்பு தருவதாக கூறி பலர் தன்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தொடர்ந்து இன்றுவரை கூறி வருகிறார்.
இவர் முதன் முதலாக ராணாவின் தம்பியுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு தான் தன்னுடைய விளையாட்டை தொடங்கினார்.
இந்தநிலையில் ராணா தனக்கு திருமணம் என வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கூறியதும் அவருக்கு இனிமையாக வாழ்த்து கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
இதுநாள் வரை ராணாவின் குடும்பத்தை விமர்சித்து வந்த நிலையில் தற்போது இனிமையாக வாழ்த்துக் கூறி இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகியுள்ளனர்.