கண் அசைவினால் அனைவரையும் ஈர்த்து ஒரே நாளில் பிரபல அந்தஸ்த்தை அடைந்தவர் பிரியா வாரியார். ஒரு அடார் லவ் படமே அவரை அப்படியான நிலைக்கு உயர்த்தியது.
இப்படத்திற்கு பின் அவரு பாலிவுட் சினிமாவில் பட வாய்ப்பும் கிடைத்தது. ஸ்ரீதேவி பங்களா என பெயரிடப்பட்டுள்ள திகில் படத்தில் அவர் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நில்லை தயாரிப்பாளர் போனிகபூர் தன்னுடைய மனைவியான நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை ஒத்திருப்பதாக இப்படக்குழுவினர் மீது புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் டிரைலர் வெளியாகியுள்ளது. அர்பாஸ் கான் முக்கிய வேடத்தில் நடிக்க Prasanth Mambully இப்படத்தை இயக்கியுள்ளார்.