Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் மீது காதலில் விழுந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

Sridevi's daughter Jhanvi Kapoor fell in love with the actor

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். நடிகையான இவர் 2018-ம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தடக் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை ஜான்வி காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.

இருவரும் ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் திடீரென்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தோஸ்தானா 2 படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஜோடி சேர்ந்தார். ஜான்வியும், கார்த்திக் ஆர்யனும் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் கார்த்திக் ஆர்யனும், ஜான்வி கபூரும் கோவாவில் ஒரே நிறத்தில் டீ-சர்ட் அணிந்து ஜோடியாக சுற்றிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. ஏற்கனவே கார்த்திக் ஆர்யன் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகானை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.