Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

srinidha-won-super-singer-junior-9-title update

“தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று 9-வது சீசன் சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியது.சூப்பர் சிங்கர் ஜூனியர் 9-வது சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஶ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்ஷரா, அனன்யா, மேக்னா ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 -வது சீசன் டைட்டில் மற்றும் ரூ.60 லட்சம் வீட்டை ஶ்ரீநிதா பரிசாக வென்றவர். இரண்டாவது இடத்தை ஹர்ஷினி வென்றார். இவருக்கு பரிசுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை பிடித்த அக்ஷராவிற்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் மற்ற மூன்று போட்டியாளர்களான ரிச்சா, அனன்யா, மேக்னா ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. “,

srinidha-won-super-singer-junior-9-title update
srinidha-won-super-singer-junior-9-title update