Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“விக்னேஷ் சிவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”: பிரபல இயக்குனர் பேச்சு

ss-kumaran-speech-latest viral

“இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்திருந்தது.இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் என்று இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \”விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு ‘எல்.ஐ.சி’ என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன்.

காரணம் ‘எல்.ஐ.சி’ என்கிற பெயரை 2015-ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால், ‘எல்.ஐ.சி’ என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.

இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.’எல்.ஐ.சி’ என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்\” என்று குறிப்பிட்டுள்ளார்.”,

ss-kumaran-speech-latest viral
ss-kumaran-speech-latest viral