தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, மிர்ச்சி விஜய் சிவாங்கி உட்பட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க கல்லூரியினை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது டான் படத்தின் கதை அது மட்டுமல்ல. ஹீரோ பிறந்ததிலிருந்து முப்பது வரை நடக்கும் விஷயங்களை மையமாக கொண்டு உருவான திரைப்படம் தான் இந்த படத்தின் கதைக்களம் என தெரியவந்துள்ளது.
இந்த தகவலை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
