தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாக படத்துக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் உட்பட பல முக்கிய நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது ஒரு கேங்ஸ்டர் கும்பல் சிறையை உடைத்து தப்பிச் செல்ல முயற்சி செய்கிறது. செயலராக பணியாற்றும் ரஜினிகாந்த் இந்த செயலை எப்படி தடுத்து நிறுத்துகிறார்? அந்த கும்பலை எப்படி வளைத்து பிடிக்கிறார் என்பதுதான் கதை என சொல்லப்படுகிறது.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஜெயிலுக்குள் படமாக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.