Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைப்போடு சிம்புவின் தோற்றத்தையும் மாற்றிய கவுதம் மேனன் – வைரலாகும் பர்ஸ்ட் லுக்

STR 47 titled as Vendhu Thanindhathu Kaadu

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக கவுதம் மேனனுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை திடீரென மாற்றி உள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் சிம்புவின் புதுவிதமான தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ஏற்கனவே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.