தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சர்ச்சை நாயகன் என சொல்லப்படும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சிக்கி வந்த சிம்பு சில கால இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுக்கத் தொடங்கியுள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பத்து தல.
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்குகிறார். படம் டிசம்பரில் வெளியாக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் கால தாமதமான காரணத்தினால் தற்போது இந்த படத்தை மார்ச் மாதம் வெளியிட முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே மார்ச் மாதத்தில் பத்து தல திரைப்படத்தை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
